Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லாகூர் குண்டு வெடிப்பு: மோடி கடும் கண்டனம்

லாகூர் குண்டு வெடிப்பு: மோடி கடும் கண்டனம்

லாகூர் குண்டு வெடிப்பு: மோடி கடும் கண்டனம்
, திங்கள், 28 மார்ச் 2016 (04:48 IST)
பாகிஸ்தானின் லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி  கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
பாகிஸ்தானின் லாகூர் நகரில் பூங்கா ஒன்றில் தற்கொலைப்படையினர் திடீர் தாக்கல் நடத்தினர். இந்த தாக்குதலில், பொது மக்கள் சுமார் 64 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சுமார் 100 பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தீவிரவாதியின் இந்த திடீர் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசும், பல்வேறு உலக நாட்டு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
இது குறித்து, இநதியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பதவில், லாகூரில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கோரசம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு  இரங்கல் தெரிவிக்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியா சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil