Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிடைச்சதை அள்ளிக் கொண்டு தப்பிய கோத்தா? – விமானமா? கப்பலா?

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (11:36 IST)
இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அதிபர் கோத்தாபய ராஜபக்‌ஷே நாட்டை விட்டு தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் மக்கள் எரிப்பொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில மாதங்கள் முன்னதாக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்‌ஷே பதவியை விட்டு தப்பி ஓடினார். பின்னர் ரணில் விக்ரமசிங்கெ பிரதமராக பதவியேற்று நிலமையை சரிசெய்ய முயன்றார்.

ஆனாலும் நிலைமை கட்டுக்குள் வராததால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அதிபர் கோத்தாபய ராஜபக்‌ஷே வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. போராட்டக்காரர்கள் வீட்டை முற்றுகையிடப்போவதாக முன்னதாக உளவுத்துறை தகவல் வந்ததால் கோத்தாபய அங்கிருந்து குடும்பத்துடன் தப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் விமானத்தில் தப்பி சென்றதாகவும், இலங்கையின் போர் கப்பலில் தப்பி சென்றதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் அவர் தப்பித்தபோது அவருடன் மூன்று பெரிய பெட்டிகளை எடுத்து சென்றதகாவும் அதில் என்ன இருந்தது என்ற யூகங்களும் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments