Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகள் விற்பனைக்கு; 45% தள்ளுபடி: ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய புகைப்படம்

குழந்தைகள் விற்பனைக்கு; 45% தள்ளுபடி: ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய புகைப்படம்
, திங்கள், 21 மார்ச் 2016 (16:41 IST)
சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இரண்டு இளம் சிறார்கள் கைகள் மற்றும் வாய் கட்டப்பட்டு குழந்தைகள் விற்பனைக்கு 45% தள்ளுபடி காரணம் அவர்கள் மோசம் என ஒரு புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது.


 

 
 
டென்னிசி காவல் துறையினர் கைகள் மற்றும் வாய் கட்டப்பட்ட அந்த குழந்தைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட அந்த புகைப்படத்தில் ஒரு காரின் உள்ளே அந்த குழந்தைகள் இருக்கிறார்கள். புகைப்படத்தின் கீழே குழந்தைகள் விற்பனைக்கு என்ற அந்த தலைப்பு உள்ளது.
 
மெம்பிஸ் காவல் துறை செய்தி தொடர்பாளர் லூயிஸ் பிரவுன்லே கூறுகையில் அந்த புகைப்படம் கடந்த வியாழன் கிழமை சில ஆதாரங்களுடன் காவல் துறைக்கு அனுப்பப்பட்டது என கூறினார். மேற்கொண்டு தகவல்கள் கூற அவர் மறுத்துவிட்டார்.
 
கடந்த வாரம் வெளியிடப்பட்ட அந்த புகைப்படம் தற்போது அந்த முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை வெளியிட்ட நபரின் உறவினர் ஒருவர் கூறும் போது அந்த புகைப்படம் விளையாட்டாக பதிவேற்றப்பட்டது என கூறினார்.
 
மேலும் அவர் கூறும் போது எங்கள் குடும்பம் அனைத்து குழந்தைகளையும் மிகவும் நேசிக்கிறது. அந்த புகைப்படம் குறித்து மற்றவர்கள் கூறும் கருத்துக்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil