Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க செய்தியாளரின் தலையைத் துண்டித்த ஐஎஸ்ஐஎஸ் போராளிகள்: வீடியோ வெளியீடு

அமெரிக்க செய்தியாளரின் தலையைத் துண்டித்த ஐஎஸ்ஐஎஸ் போராளிகள்: வீடியோ வெளியீடு
, புதன், 20 ஆகஸ்ட் 2014 (14:43 IST)
ஈராக்கில், ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் ஜேம்ஸ் போலே என்பவரின் தலையைத் துண்டித்துக் கொலை செய்து, அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

‘அமெரிக்காவுக்கு ஒரு தகவல்‘ என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர் 40 வயதுடைய போலே. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு துருக்கிக்குச் சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டார்.

அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013 ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர் என்று கூறப்படுகிறது.

ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்தப் படுகொலையை போராளிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றை ஒற்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் தீவிரமாக முன்னேறி வருகின்றனர். ஈராக்கில் அவர்கள் மீது அமெரிக்கா வான்வெளித் தாக்குலை நடத்துகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த போராளிகள் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போரைப் பற்றி செய்தி சேகரித்துவரும் அமெரிக்க செய்தியாளரின் தலையைத் துண்டித்துப் படுகொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil