Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றவாளிகளை சினிமா பார்க்க சொன்ன நீதிபதி : கோர்டில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (11:02 IST)
பாலிவுட் நடிகரும் சூப்பர் ஸ்டாருமான சல்மான் கான்  காட்டில் மானை வேட்டையாடியது தொடர்பாக வழக்கில் நீதிமன்றத்தின் பல ஆண்டுகள் விசாரிப்புகளுக்குப்பின் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். 

நம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கும் தடைவிதிக்கப்பட்டது.காரணம் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்று என்று பீட்டா அமைப்பு கோர்டில்  வழக்கு தொடர்ந்தது. அதை எதிர்த்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடி வெற்றி பெற்றது எல்லோருக்கும் தெரியும். இதெல்லாம் விலங்குகள் நலத்துக்காக ஏற்படுத்தப்பட்டது ஆகும்.
 
அதுபோல அமெரிக்காவில்  மிஸ்ஸ்ரி மாநிலத்தில் மானை வேட்டையாடி கொன்ற குற்றவாளிகளுக்கு  ஓரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிபதி அத்துடன் பாம்பி என்ற அனிமேசன் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
 
குற்றம் சுமத்தப்பட்ட பெர்ரி மற்றும் அவரது நண்பர்களும் கடந்த சில ஆண்டுளில் பலநூறு மான்கள் வேட்டையாடிக் கொன்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்கள்.
 
அவர்கள் மீதான குற்றச்சாட்டு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பெர்ரி மற்றும் அவனது நண்பர்களுக்கு  ஓராண்டு சிறைத்தண்டனையுடன் பாம்பி என்ற மானை பிரதானமாக் கொண்ட திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
 
இந்த தீர்ப்பு அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சன்னி லியோனுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் சத்தீஸ்கர் அரசு? - விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

3 காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு..!

மக்கள் வீதியில் விழுந்து நொறுங்கிய விமானம்! 10 பேர் பலி.. பலர் கவலைக்கிடம்! - பிரேசிலை உலுக்கிய விபத்து!

சென்னையில் தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? முழு விவரங்கள்..!

இதுதான் நீங்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் லட்சணமா? திமுக அரசுக்கு ஜெயக்குமார் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments