Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்: இன்னும் வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலின்!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (08:13 IST)
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் சற்று முன்னர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக அவர் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார் 
 
அதேபோல் அவர் பெங்காலி, சிங்களவர்கள், நேபாளிகள் என அனைவரும் தங்களது புத்தாண்டை பல இனத்தவர்களுக்கும் தனது வாழ்த்துக்கள் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் குறிப்பிட்டுள்ளார் அமெரிக்க அதிபரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து  தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாகக் கருதப்படுகிறது
 
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. திமுகவை பொறுத்தவரை தமிழ் புத்தாண்டு என்பது தை முதல் நாள் என்பதால் அவர் இதுவரை எந்த வருடமும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதும் அதேபோல் இன்றும் அவர் வாழ்த்து தெரிவிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது 
 
ஒட்டுமொத்த தமிழர்கள் அனைவரும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வரும் நிலையில் திமுகவினர் மட்டும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments