Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரம்ப் கழட்டி விட்டதையெல்லாம் நாம சேர்ப்போம்! – ஜோ பைடன் முடிவு!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (08:31 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள ஜோ பிடன் ஆட்சிக்கு வந்ததும் ட்ரம்ப் செய்த தவறுகளை சரிசெய்ய போவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பிடன் நடப்பு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை விட அதிக இடங்களில் வென்றுள்ளார். இதனால் இந்த முறை ஜனநாயக கட்சியின் ஆட்சியே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் அமெரிக்கா வெளியேறிய அமைப்புகள், ஒப்பந்தங்களை மீள பெற போவதாக ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

விரைவில் நடக்க உள்ள பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணையும் என அவர் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் ஆட்சியில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அதேபோல உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை நிறுத்தியது, வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற்றது போன்ற ட்ரம்ப் ஆட்சி கால முடிவுகளை ஜோ பிடன் மாற்றியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments