Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா போர் குறித்து முன்பே உக்ரைனை எச்சரித்தோம்! – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (15:05 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 3 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இந்த போர் குறித்து உக்ரைனை முன்பே எச்சரித்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் முன்னதாக நேட்டோ அமைப்பில் இணையவிருந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடர்ந்தது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த போரினால் உக்ரைனின் பல பகுதிகள் நாசமாகியுள்ளன. மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி சென்றுள்ளனர்.

இந்த சூழலில் இதுகுறித்து சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. நான் மிகைப்படுத்தி சொல்வதாக பலர் நினைக்கலாம். ஆனால் ரஷ்ய அதிபர் உக்ரைன் மீது போர் தொடங்க தயாராகி வருகிறார் என்பதை உறுதி செய்ய போதுமான தகவல்கள் எங்களிடம் இருந்தன. அதை கேட்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments