உக்ரைனை சுற்றி வளைக்கும் ரஷ்யா; அமெரிக்கர்கள் வெளியேற ஜோ பைடன் உத்தரவு!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:49 IST)
உக்ரைனை ரஷ்யாவின் ராணுவம் சுற்றி வளைக்கும் நிலையில் அங்குள்ள அமெரிக்க தூதரக பணியாளர்களை உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

சோவியத் யூனியன் சிதறியபோது தனி நாடாக உருவானது உக்ரைன். உக்ரைனில் கடந்த 2013 வரை ரஷ்யாவின் ஆதரவு பெற்ற ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கொண்ட எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட அதனால் அவர் தப்பித்து ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். பின்னர் நடந்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் போரினால் உக்ரைனின் டோனஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகள் ரஷ்ய ஆதரவாளர்கள் வசமானது.

அதை தொடர்ந்து உக்ரைனை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய ஆதரவு அரசை அமைக்க ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பங்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments