Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமானத்தில் பயணிக்க மாத தவணை திட்டம் - ஜெட் ஏர்வேஸ் அறிமுகம்

விமானத்தில் பயணிக்க மாத தவணை திட்டம் - ஜெட் ஏர்வேஸ் அறிமுகம்
, செவ்வாய், 13 டிசம்பர் 2016 (14:16 IST)
விமானத்தில் பயணிக்க ஆகும் தொகையை ஈ.எம்.ஐ. எனப்படும் மாத தவனை திட்டம் மூலம் செலுத்த ஜெட் ஏர்வேஸ் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


 

 
வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருந்தாலும், டிக்கெட்டின் விலை லட்சக்கணக்கில் இருப்பதால் நடுத்தர மக்கள் கூட, விமானப் பயணம் மேற்கொள்ள தயங்குவதுண்டு. தற்போது அதை சுலபமாக்கியுள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.
 
அதற்கு உங்களிடம் இருக்க வேண்டியது ஒரு கிரெடிட் கார்டு மட்டும்தான். ஹெச்.எஸ்.பிசி, கோடக் மகிந்திரா, ஆக்சிஸ், ஸ்டாண்டார்ட் சார்டட் இண்டஸிண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ ஆகிய 6 வங்கிகளில் ஏதேனும் ஒன்றின் கிரெடிட் கார்டை நீங்கள் வைத்திருக்க வேண்டும். 
 
விமானப் பயணம் மேற்கொள்ளும் போது, அந்த கார்டை பயன்படுத்தி நீங்கள் டிக்கெட் புக் செய்து, மொத்த விலையை மாத தவனையாக மாற்றிக்கொள்ளலாம், 3,6, 9 முதல் 12 மாதங்கள வரை உங்களுக்கு தவனை கிடைக்கும். 
 
மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ள இந்த சூழ்நிலையில், தங்களது வணிகத்தை வலுப்படுத்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
அப்புறம் என்ன.. கிளம்புங்கள்....

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா நினைவகம் ஆகும் போயஸ் கார்டன் : வெளியேறும் சசிகலா?