Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்ரேலில் ஏசு கிறிஸ்து வாழ்ந்த வீடு கண்டுபிடிப்பு (படங்கள்)

இஸ்ரேலில் ஏசு கிறிஸ்து வாழ்ந்த வீடு கண்டுபிடிப்பு (படங்கள்)
, புதன், 4 மார்ச் 2015 (15:33 IST)
முதல் நூற்றாண்டில் மேரி மற்றும் ஜோசப்பின் மகன் ஏசு கிறிஸ்து வாழ்ந்த வீட்டை பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்கள் வடக்கு இஸ்ரேலில் நாசரேத்தில் கண்டுபிடித்துள்ளனர். அங்கு ஒரு சர்ச் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு ஒன்று இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


 
 
இயேசு அங்குதான் வளர்ந்து இருக்க வேண்டும் என இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்து குறித்து இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் கென் டார்க் கூறியதாவது:-
 
மேரி மற்றும் ஜோசப் நாசரேத்தில், வாழ்ந்ததை நம்புகிறேன். தூதர் கபிரியேல் மரியாளிடம் நீ தேவனுடைய குமாரனை பெறுவாய் என வெளிபடுத்தினார். அந்த குழந்தைக்கு இயேசு என பெயரிட்டனர். இயேசு சிறு வயதில் வாழ்ந்த் இந்த வீடு நாசரேத்து சிஸ்டர் கான்வென்ட் சாலையை அடுத்து உள்ள சர்ச் அருகே கண்டுபிடிக்கபட்டது.

webdunia

அந்த வீடு சுண்ணாம்பு மலைகளை வெட்டி எடுத்து செய்யபட்டு உள்ளது. அதில் பல அறைகள் உள்ளன. வீட்டிற்கு படிகளும் உள்ளன. சுண்ணாம்பு தரை தளமாக உள்ளது. வாயில்களில் கதவுகள் இல்லை. மொத்தத்தில் இதன் வடிவமைப்பு அலிலேயாவில் இருந்த ஆரம்ப ரோமன் குடியிருப்புகள் போல் உள்ளன என தெரிவித்தார். சர்ச்சின் கீழே இயேசுவின் வீடு கட்டப்பட்டுள்ளது என்றும் இதனை அங்கிருந்த கல்வெட்டுகளின் மூலம் தெரிந்து கொண்டோம்.

webdunia

 
 
மேலும் இந்த கல்வெட்டுகளை கி.பி 670-யில் டி லூகாஸ் சேங்டிஸ் என்ற நபர் எழுதியதாகவும், இதன் மூலம் இயேசு கிறிஸ்து அந்த வீட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
 
இந்த வீட்டு முதன் முதலில் 1880-ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்போது அது முக்கியத்துவம் உள்ள தளம் என மட்டுமே தெரிய வந்தது. பின்னர் தொடர் ஆராய்ச்சியில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன என கூறினார்.
 
இந்நிலையில் இயேசு வாழ்ந்த இவ்விடத்தில், பிஷப்புகள் சர்ச் கட்டி பராமரிக்க வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil