Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5,000 உயிரனங்கள் புதைப்பு: சர்ச்சையில் ஜப்பான்!!

5,000 உயிரனங்கள் புதைப்பு: சர்ச்சையில் ஜப்பான்!!
, வியாழன், 1 டிசம்பர் 2016 (11:32 IST)
ஜப்பானில் உள்ள ஸ்பேஸ் வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்கா, உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.


 
 
இங்குள்ள உறைபனி அருங்காட்சியகத்தில், புதிதாக ஐஸ் ஸ்கேட்டிங் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அங்கு மீன்கள், நண்டுகள், சுறாக்கள் போன்ற 5 ஆயிரம் உயிரினங்கள் பனிக்குள் புதைக்கப்பட்டிருந்தன.
 
ஆனால் அவை அனைத்தும் பனிக்கு அடியில் தண்ணீரில் உயிரோடு இருக்கும் என்று நினைத்தால், இறந்த நிலையில் உறைந்து போயிருந்தது. 
 
ஆரம்பிக்கப்பட்ட இரண்டே வாரங்களில் ஐஸ் ஸ்கேட்டிங் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் ஜப்பான் முழுவதும் பரவிவிட்டன. 
 
உயிரோடு இருந்த உயிரினங்களைக் கொண்டுவந்து, உறைபனிக்குள் வைக்கவில்லை. இறந்த உயிரினங்களைத்தான் வைத்திருக்கிறோம் என பூங்கா நிர்வாகி தெரிவித்துள்ளார்.
 
மக்கள் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தால் ஐஸ் ஸ்கேட்டிங் பகுதியை மூடுவதாக அறிவித்துவிட்டனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி உடல்நிலை: அறிக்கை வெளியிட்ட மருத்தவமனை