ஜப்பான் மீது அணுகுண்டு வீசி 80 ஆண்டுகள் நிறைவு.. டிரம்புக்கு அழைப்பு..!

Siva
புதன், 29 ஜனவரி 2025 (14:06 IST)
ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி 80 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஜப்பான் மேயர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு வரும் நிலையில் அதனை ஞாபகப்படுத்தும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களில் மேயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த 1945 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இரண்டு நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில்  சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த அணு கதிர்வீச்சின் தாக்குதலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த கொடூர தாக்குதல் நடந்து 80 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஹிரோஷிமா நாகசாகி மேயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தங்கள் நாட்டிற்கு வருகை தந்து அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்த  மக்களிடம் நேரடியாக உரையாட வேண்டும் என்றும் அவர்களுடைய ஆசையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் டிரம்புக்கு அனுப்பிய கடிதத்தில் அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். இந்த அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜப்பான் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments