Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல அனிமேஷன் பட கட்டிடத்தில் தீ – குண்டு வெடித்ததா?

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (12:44 IST)
ஜப்பானில் உள்ள பிரபலமான அனிமேஷன் படங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் கியோட்டோ மாகாணத்தில் உள்ளது பிரபலமான கியோட்டோ அனிமேஷன் ஸ்டுடியோ. டி.வி தொடர்கள் மற்றும் திரைப்படங்களாக நிறைய அனிமே படங்களை இவர்கள் உருவாக்கியுள்ளார்கள். டாமாக்கோ மார்க்கெட், மிஸ் கோபயாஷி ட்ராகன் போன்றவை இவர்கள் தயாரித்த உலகளவில் பிரபலமான கார்ட்டூன் தொடர்கள்.

இன்று காலை வழக்கம்போல பணிகள் நடந்து கொண்டிருந்திருக்கின்றன. அப்போது திடீரென பெரிய வெடிசத்தம் ஒன்று கேட்பதை சாலையில் நடந்து சென்றவர்கள் கேட்டிருக்கிறார்கள். திரும்பி பார்த்த போது கியோட்டோ அனிமேஷன் ஸ்டுடியோ பற்றி எரிந்து கொண்டிருந்திருக்கிறது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கொண்டிருக்க மீட்பு பணியினர் உள்ளே சென்று காயம்பட்டவர்களை காப்பாற்றி வந்தனர்.

ஆனால் அவர்கள் காப்பாற்ற போகும் முன்னரே ஒருவர் இறந்துவிட்டார். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அனிமேஷன் அலுவலகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்ததாகவும் அவர் கையில் வைத்திருந்த அமிலத்தை வீசியதால் வெடிவிபத்து ஏற்பட்டு தீ பற்றியதாகவும் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியுள்ளார். இது ஏதும் பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்ற ரீதியின் கியோட்டோ போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments