Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் காஸாவில் பாலஸ்தீனர்கள் 800 பேர் பலி

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2014 (18:32 IST)
காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது.
 
18-வது நாளாக நேற்று காஸாவின் பல்வேறு இடங்களில் ஏவுகணை வீச்சுகளும், குண்டுவீச்சுகளும் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்பட்டன.
 
நேற்றைய தாக்குதலில் மட்டும், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் அவசரகால உதவி மையத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப்-அல்-காத்ரா தெரிவித்துள்ளார்.
 
கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 32 இஸ்ரேல் ராணுவத்தினரும், 3 அப்பாவி பொதுமக்களும், தாய் நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 
2009 ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீன மண்ணில் நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் தற்போது நடந்து வரும் தாக்குதல் மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. இந்த போரில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments