Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் – பாலஸ்தீனம் 11 நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (11:09 IST)
இஸ்ரேல் – பாலஸ்தீனம் 11 நாள் போர் நிறுத்த ஒப்பந்தமானது இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

 
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பாலஸ்தீனத்தின் காசா முனையை கட்டுப்படுத்தி வரும் ஹமாஸ் அமைப்பிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் எழுந்தது.
 
இதனால் இரு தரப்பினரும் பயங்கர ஏவுகணைகள் உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தியதில் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை காசா முனையில் பெண்கள், குழந்தைகள் உட்பட 277 பேரும், மேற்கு கரையில் 24 பேரும், இஸ்ரேலில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில் போரை நிறுத்த இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் பலனாக இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 
 
இந்த 11 நாள் போர் நிறுத்த ஒப்பந்தமானது இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஹமாஸின் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments