Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒபாமாவின் தலையை வெள்ளை மாளிகையில் புகுந்து துண்டிப்போம் - ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல்

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2015 (11:23 IST)
வெள்ளை மாளிகையில் புகுந்து ஒபாமாவின் தலையை துண்டிப்போம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
 
இது தொடர்பாக அரபிக் நாடுகளில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வீடியோ ஒன்றை ஒளிபரப்பியுள்ளது. அந்த வீடியோ காட்சியில், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் குர்தீஷ் படையை சேர்ந்த வீரர் ஒருவரின் தலையைத் துண்டித்தனர்.
 

 
பின்பு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் பேசுகையில், ”இஸ்லாத்தை எதிர்க்கும் நபர் யாராக இருந்தாலும் அவர்களின் தலையெழுத்து இதுதான். ஒபாமாவே நாங்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் உனது தலையை துண்டாக்குவோம். அமெரிக்காவை இஸ்லாமிய தேசமாக மாற்றுவோம்” என்று கூறியுள்ளார்.
 
மேலும், ”ஒவ்வொரு முறையும் நீங்கள் ஏவுகணையை ஏவும் போது, உங்கள் படைவீரர்களின் தலையை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்” என்று ஈராக் குர்தீஷ் தலைவர் மசூவுத் பராசானிக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளனர்.
 
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஈராக் குர்தீஷ் தலைவர் மசூவுத் பராசானி ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments