சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை.. அமெரிக்க ஹெலிகாப்டர் தாக்குதல்..!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (08:19 IST)
சிரியாவில் அமெரிக்க ஹெலிகாப்டர் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன

சிரியா நாட்டின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை ஐஏஎஸ் அமைப்பின் முக்கிய நபராக கருதப்படும் அந்த அமைப்பின் தலைவர் அல் ஹாஜி அலி பதுங்கி இருந்ததாக ரகசிய தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்தது.

இதையடுத்து அமெரிக்க படையினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று அந்த பகுதியில் தாக்குதல் நடத்தியதில் அவர் சுட்டு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அமைப்பின் தலைவர் அல் ஹாஜி அலி மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பயங்கரவாத செயல்களை செய்து வந்ததாகவும் மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்ட நிலையில் அவர் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

சிரியாவில் ஐஏஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments