Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.. அரசு அளித்த அனுமதி..!

Siva
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (12:00 IST)
9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க ஈராக் நாட்டின் அரசு அனுமதி அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈராக் நாட்டில் தற்போது பெண்களின் திருமண வயது 18 என்று உள்ள நிலையில் புதிய மசோதா அவர்களின் படி ஆண்களுக்கு 15 வயதிலும் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் படி பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்துடன் ஒன்பது வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என்பது சட்டமயமாக்கப்படுகிறது. பெண்களின் திருமண வயது 18 என்று இருந்தபோதிலும் ஏற்கனவே ஈராக்கில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ஐநா குழந்தைகள் அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.

தற்போது ஈராக் அரசாங்கமே பெண்களின் திருமண வயது 9 என அறிவித்ததால் குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த மசோதாவுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்