Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

Mahendran
செவ்வாய், 21 மே 2024 (12:47 IST)
ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து இடைக்கால பிரதமராக துணை அதிபராக இருந்த முகமது முக்பர் என்பவர் பதவி ஏற்றுள்ளார். 
 
இந்த நிலையில் அதிபர் தேர்தலை நடத்துவது குறித்து இடைக்கால அதிபர் முக்பர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் தேர்தல் குறித்த அறிவிப்பு வழியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
ஈரான் நாட்டின் சட்டத்தின் படி அந்நாட்டின் அதிபர் உயிரிழந்தால் அடுத்த ஐம்பது நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில் ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைசி நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அடுத்த ஐம்பது நாட்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலையில் தேர்தலை நடத்த இடைக்கால அதிபர் முகமது முக்பர் ஆலோசனை செய்து வருகிறார். 
 
அனேகமாக வரும் ஜூன் 28ஆம் தேதி ஈரானில் அதிபர் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் விரைவில் தேர்தல் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments