ஈரானை தாக்க உரிமை உள்ளது; பகீர் கிளப்பும் நேதன்யாகு! - ஈரான் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Prasanth Karthick
திங்கள், 7 அக்டோபர் 2024 (09:39 IST)

இஸ்ரேல் மீது ஈரான் ராக்கெட் மழை பொழிந்த நிலையில் ஈரானை திரும்ப தாக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாக அதன் பிரதமர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இஸ்ரேல் - ஹெஸ்புல்லா அமைப்பு இடையே போர் மூண்டுள்ள நிலையில், லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பின் பதுங்கு தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹெஸ்புல்லாவின் தலைவர், தளபதிகள் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் ஹெஸ்புல்லாவிற்கு ஆயுத உதவி செய்து வந்த ஈரான் நேரடியாக இஸ்ரேலுக்கு எதிரான போரில் இறங்கியது. கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கியது. அதில் பல ஏவுகணைகளை, தடுப்பு அமைப்பின் மூலம் இஸ்ரேல் வீழ்த்தியது. எனினும் தற்போது இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது.
 

ALSO READ: காதலை ஏற்க மறுத்த குடும்பம்; 13 பேரையும் விஷம் வைத்து கொன்ற பெண்! - சிக்கியது எப்படி?
 

இந்நிலையில் சமீபத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்துவதற்கான உரிமை இஸ்ரேலுக்கு உள்ளதாக பேசியுள்ளார். எந்த நேரத்திலும் இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தலாம் என்ற பதற்றம் உள்ளது.

 

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானில் இரவு நேரங்களில் விமான சேவைகள் தடை செய்யப்பட்டு, விமான பாதைகள் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே இஸ்ரேலுடன் ஹமாஸ், ஹெஸ்புல்லா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் போர் நடத்தி வரும் நிலையில், ஈரானுடனும் போர் எழுந்துள்ளது மத்திய தரைக்கடலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள்.. டிசம்பர் 19-ஆம் தேதி திட்டம் தொடக்கம்..!

பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது..!

மதுரை புதிய மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த வருஷமாவது தீபம் ஏத்துவோம்!... இயக்குனர் மோகன் ஜி ஃபீலிங்!...

சென்னையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்: இன்று சவரன் ரூ.96,320

அடுத்த கட்டுரையில்
Show comments