Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

Siva
வெள்ளி, 20 ஜூன் 2025 (16:57 IST)
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளது. இதனால், இந்தியா உட்பட பல உலக நாடுகள் ஈரான் வழியாக விமானங்களை இயக்க முடியாமல் தவிக்கின்றன. மேலும் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிரமப்பட்டதும், சிலர் சாலை வழியாக வெளியேறியதும் சமீபத்தில் நாம் கண்டோம்.
 
இந்தச் சூழலில், இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து, தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மட்டும் ஈரான் திறந்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில் சிக்கி தவித்த இந்தியர்களை வெளியேற்ற, இந்தியாவில் இருந்து வரும் சிறப்பு விமானங்களுக்கு ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது.
 
சுமார் 1,000 இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்தியா சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு விமானங்களில் முதல் விமானம் இன்று இரவு டெல்லிக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் நாடு இந்தியாவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளித்திருப்பது மற்ற உலக நாடுகளை ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments