Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 நாட்களாக மிதக்கும் ஈரான் – பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (10:47 IST)
ஈரானில் கடந்த 19 நாட்களாக தொடரும் பெருமழையால் கிட்டதட்ட 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி தொடங்கிய மழை தொடர்ந்து 17  நாட்களாக மழை பெய்டு வருகிறது. கடந்த பத்து வருடங்களில் ஈரானில் பெய்யாத மழையாக இது பதிவாகி உள்ளது. மார்ச் 19க்கு முன்னதாக ஈரானின் வடகிழக்கு பகுதியில் தொடங்கிய மழை பாதிப்பு மார்ச் 25க்கு பின்னர் மேற்கு, தென்கிழக்கு என பரவத் தொடங்கியது.  ஏப்ரல்  1லிருந்து தென்கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.

இதனால் நாடு முழுவதும் 15 மாகாணங்களில் 2,199 கிராமச் சாலைகளும் 84 பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் 141 ஆறுகளின் கரைகள் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  சுமார் 400 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 12 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் சேதமடைந்துள்ளன

இந்த மழைக்கு இதுவரை 70 பேர் பலியாகி உள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 800 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதால் உதவிகள் கிடைப்பதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments