Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி – இனி தேவையில் இன்சுலின் ஊசி !

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (08:47 IST)
சர்க்கரை நோயாளிகளுக்கான இன்சுலின் ஊசிக்குப் பதிலாக மாத்திரைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நீரிழிவு நோயாளிகள் தங்களது சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக இன்சுலின் ஊசிகளைப் போட்டுக்கொள்வது வாடிக்கை. ஆனால் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் குழந்தைகள் இதற்காக அடுத்தவர்களின் உதவியை நாட வேண்டிய சூழல் உள்ளது. அதேப் போல இன்சுலின் ஊசிகளை குளிரூட்டப்பட்ட வெப்பநிலையில் பாதுகாக்க வேன்டியதும் அத்தியாவசியமானது. இந்நிலையில் இந்த குறைகளைப் போக்கும் விதமாக இன்சுலின் மாத்திரைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்தான்  இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.  30 மில்லி மீட்டர் நீளம் கொண்ட இந்த மாத்திரைகள் ஜீரண மண்டல அமிலங்களால் பாதிக்கப்படாமல் இருக்க அதன் மீது பிரத்யேக பூச்சு பூசப்பட்டுள்ளது. இந்த மாத்திரை உட்கொள்ளப்பட்டவுடன் நேரடியாக சிறுகுடலை சென்றடையும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுகுடலில் பி.ஹெச். அளவு அதிகம் இருக்கும் என்பதால் அப்பகுதியை அடைந்த பின்பே மாத்திரை வெடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த கண்டிபிடிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments