Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க வாழ் இந்தியருக்கு 2 1/2 ஆண்டு சிறை தண்டனை: நியூயார்க் நீதிமன்றம்

அமெரிக்க வாழ் இந்தியருக்கு 2 1/2 ஆண்டு சிறை தண்டனை: நியூயார்க் நீதிமன்றம்
, ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (11:15 IST)
அமெரிக்க வாழ் இந்தியரான பிரியன் ராமநாராயணன் என்பவர் போலி வெண்கலச் சிற்பங்களை விற்பனை செய்ததற்காக 2 1/2 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.
 
பிரியன் ராமநாராயணன் என்பவர் வெண்கல சிற்பக் கலைஞராவார். இவர் பிரபல சிற்பக் கலைஞர்களான ராபர்ட் இன்டியானா, செயின்ட் கிளேர் ஆகியோருடன் சேர்ந்து தயாரித்ததாக கூறி ஏராளமான வெண்கலச் சிற்பங்களை விற்பனை செய்துள்ளார். 
 
சிற்பங்களை வாங்கியவர்கள், அவற்றில் பிரபல சிற்பக்கலைஞர்களின் பங்களிப்பு ஏதும் இல்லை என்பதை அறிந்தனர். இதைத்தொடர்ந்து, ராம நாராயணன் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
இவ்வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் ராமநாராயணனுக்கு 2 1/2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதில் போலி சிற்பங்களை வாங்கியவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ.43 லட்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil