Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2016 (11:37 IST)
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


 

 
அமெரிக்காவிலுள்ள ருத்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷனி பட்டேல் என்ற மாணவர், பொருளாதார பட்டப்படிப்பு படித்து வந்தார்.
 
இவர் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே அமைந்துள்ள சென்ட்ரல் அவினியூ அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார். அவருடன் மற்றொரு மாணவரும் தங்கியிருந்தார்.
 
இந்நிலையில், ஷனி பட்டேலும், அவரது சக மாணவரும் அறையில் இருந்தபோது, சுமார் 20 வயதுக்கு மேற்பட்ட 2 வாலிபர்கள் அங்கு வந்தனர்.
 
அவர்கள் ஷனி பட்டேலையும், அவரது நண்பரையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி விட்டு அங்கிருந்து தப்பினர்.
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால், ஷனி பட்டேல் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
அவருடன் தங்கி இருந்த மற்றொரு மாணவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம், ருத்கர்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த கொலை குறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்து 2 இந்திய மாணவர்கள் மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments