தென்ஆப்பிரிக்காவில் பயங்கரம்: இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 5 பேர் உடல் கருகி பலி

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (13:19 IST)
தென்ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 
 
இந்தியாவை சேர்ந்த மாஞ்ஜரா என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தென்ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளார். பின்பு அவர் அந்த நாட்டைச் சேர்ந்த பீபி என்ற பெண்ணை திருமணம் செயதுள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது.
 
மாஞ்ஜரா அங்கு ஒரு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதில் வந்த வருமானத்தை வைத்து சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள பீட்டர் மரிட்ஷ் பர்க் என்ற பகுதியில் வீடு வாங்கியுள்ளார். இந்த நிலையில்  மாஞ்ஜராவின் குடும்பத்தினர் அனைவரும் அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் யாரோ அவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். 
 
இதனால் மாஞ்ஜரா மற்றும் அவரது மனைவி, மேலும், அவரது 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments