Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-பாகிஸ்தான் மோதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: எச்சரிக்கும் பத்திரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் மோதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: எச்சரிக்கும் பத்திரிக்கை
, வியாழன், 3 செப்டம்பர் 2015 (14:02 IST)
ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதட்டங்கள் மற்றும் மோதல்கள் ஆபத்தான விளைவுகளில் போய் முடியும் என நியூஸ் இன்டர்நேஷனல் என்ற பாகிஸ்தானிய நாளேடு எச்சரித்துள்ளது.

இந்தியா 2003 முறை போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டுள்ளது எனவும், ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தனித்தனியாக 70  முறை மீறல்களில் ஈடுபட்டது என பாகிஸ்தான் இந்தியா மீது புகார் கூறுகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை கூடிய விரைவில் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை எனவும் அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
இரு நாட்டு எல்லைக் கட்டுப்பாட்டு படையும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றது.

காஷ்மீரில் என்ன நடக்கிறது என உரக்க குரல் கொடுங்கள் என்று பாகிஸ்தான் செனட் தலைவர் ராஸா ரப்பானி சர்வதேச முஸ்லீம் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறார் எனவும் அந்த பத்திரிக்கை குறிப்பிடுகிறது.

பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ்யிடம்  எல்லையில் நிலவி வரும் பதற்றம் குறித்து தனது கவலைகளை தெரிவித்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோசமான நிலைமை இருப்பது இருபுறமும் பதற்றமாகவே உள்ளது என்று அந்த  பத்திரிக்கை கூறுகிறது.

சர்வதேச அரங்கில் கஷ்மீர் பிரச்சனை மீண்டும் தலைத்தூக்கி இருப்பது இரு நாடுகளுக்கும் மோசமான விளைவுகளை  ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்த விவகாரத்தில் நட்பு ரீதியாக இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஐக்கிய நாட்டு சபை முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil