Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் எல்லை வீரர்கள் கைகலப்பு -பரபரப்பு வீடியோ

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (16:24 IST)
இந்தியா-பாகிஸ்தன் எல்லையில், இரு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் கை கலப்பில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு பொதுவான எல்லை ஒன்று உள்ளது. அதை ஜீரோ லைன் என்று அழைப்பார்கள். அங்கு தினமும் இரு நாட்டு கொடிகளும் காலையில் ஏற்றப்படும். மாலையில் இறக்கப்படும். இது சம்பிரதாய நிகழ்ச்சி ஆகும். எனவே அங்கு இரு நாட்டு வீரர்களும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது.
 
இந்நிலையில், வழக்கம் போல் இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது இரு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு கொடியை கையில் தூக்கி பிடித்தவாறு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, பாகிஸ்தான் விரர், இந்திய வீரரோடு மோதி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திய வீரர், அவரை தாக்க முயன்றார். பதிலுக்கு பாகிஸ்தான் வீரரும் தாக்க முயன்றார். அங்கு கைகலப்பு உருவாவதை கண்ட இரு நாட்டு வீரர்களும் அவர்கள் இருவரும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
 
இந்த நிகழ்வு வீடியோவாக வெளிவந்துள்ளது. அந்த பரபரப்பு வீடியோ உங்கள் பார்வைக்கு...
 


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments