Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்வதேச வளர்ச்சி மாநாடு: இந்தியாவும், சீனாவும் புறக்கணிப்பு

சர்வதேச வளர்ச்சி மாநாடு: இந்தியாவும், சீனாவும் புறக்கணிப்பு
, சனி, 19 ஏப்ரல் 2014 (13:04 IST)
மெக்ஸிகோவில் நடைபெற்ற சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு(ஜிபிஇடிசி) மாநாட்டை இந்தியாவும், சீனாவும் புறக்கணித்துள்ளன.
சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு (ஜிபிஇடிசி) மாநாடு மெக்ஸிகோவில் நடைபெற்றது. 2 நாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர்.
 
ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இந்தியாவும், சீனாவும் புறக்கணித்து விட்டன. இதுபற்றி ஐ.நா. அதிகாரிகள் கூறுகையில், "மாநாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட வளர்ந்து வரும் நாடுகள் தொடர்பான சில அம்சங்கள் மீது இந்தியாவும், சீனாவும் கவலை கொண்டிருந்தன. குறிப்பாக தெற்கு, தெற்கு ஒத்துழைப்பு (வளர்ந்து வரும் நாடுகள் ஒவ்வொன்றும் தங்களிடையே இயற்கை வளங்கள், தொழில்நுட்பம், அறிவுக்கூர்மையை பகிர்ந்து கொள்ளுதல்) என்ற கோட்பாட்டின் நோக்கங்கள் மீது 2 நாடுகளும் அதிருப்தியில் உள்ளன.
 
இதேபோல், தெற்கு, தெற்கு ஒத்துழைப்பு கோட்பாட்டின் மீதுள்ள அதிருப்தி காரணமாக 133 வளர்ந்து வரும் நாடுகளைக் கொண்ட அமைப்பில் சக்திவாய்ந்த தனிக்குழுவாக செயல்படும் ஜி 77 நாடுகளும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
 
மாநாட்டில் அனைத்து நாடுகளும் கலந்து கொள்ளாத நிலையில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடில்லை எனவே ஜிபிஇடிசி மாநாட்டில் இந்தியாவும், சீனாவும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil