Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'புதிய பாகிஸ்தானில் திருமணம் செய்வேன்' - இம்ரான் கான்

'புதிய பாகிஸ்தானில் திருமணம் செய்வேன்' - இம்ரான் கான்
, திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (15:54 IST)
இஸ்லாமாபாத்தில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய இம்ரான் கான், தான் புதிய பாகிஸ்தானை உருவாக்கிய பின் திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
பாகிஸ்தான்- டெக்ரீக்-இ -இன்சாப் கட்சியின் தலைவரான இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவி விலகுமாறு  வற்புறுத்திவருகிறார்.
 
இந்நிலையில், தனது ஆதரவாளர்களிடம் பேசிய அவர், நான் உங்களுக்காக மட்டும் அல்ல எனக்காகவும் புதிய பாகிஸ்தானை உருவாக்க நினைக்கிறேன், ஏனென்றால் அந்த புதிய பாகிஸ்தானில் தான் நான் திருமணம் செய்ய திட்டமிட்டுளேன் எனக் கூறினார்.
 
புதிய பாகிஸ்தானில் மறுமணம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ள இம்ரான் கானுக்கு வயது 62. 
 
கடந்த 1995 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை திருமணம் செய்த இம்ரான் கான் 2004 ஆம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். இவர்களின்  இரு மகன்கள் அவர்களது தாயுடன் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil