Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விடுதலை செய்யாவிட்டால் மரணத்தை தவிர வேறு வழியில்லை’ - தமிழ் அரசியல் கைதிகள்

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2015 (17:51 IST)
ஜனாதிபதி தீர்க்கமான பதிலை வழங்கவில்லை எனில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு மரணத்தை தழுவுவோம் என்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிடுக்கு தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
 

 
நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கடந்த 12ஆம் தேதி ஆரம்பித்த இவர்களது போராட்டம் 17ஆம் தேதி வரையில் நீடித்திருந்தது.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் 7ஆம் தேதிக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக எழுத்துமூலமாக உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர்.
 
இந்நிலையில், நவம்பர் 7ஆம் திகதி நெருங்குகின்ற நிலையில், சிறையில் உள்ள தமிழ் கைதிகள் விடுதலை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
 
"வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி மௌனமாக இருக்கின்றார். எம்மை பிணையில் விடுவது தொடர்பில் பேச்சுகள் இடம்பெறுகின்றன. நாம் கோருவது பொதுமன்னிப்பைத்தான். பிணையில் விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எமக்குப் பொதுமன்னிப்புத்தான் வேண்டும்'' என்று தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும், “வருகின்ற 7ஆம் தேதிக்கு முன்னர் தீர்க்கமான பதிலை ஜனாதிபதி எமக்கு வழங்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் நாம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சாவைத் தழுவுவோம்.
 
இதுதான் எமக்கு இறுதியாக எஞ்சியுள்ள ஒரே வழி. எமது சாவுக்கு ஜனாதிபதியே முழுப் பொறுப்பு. இறந்த பின்னர் எமது உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கின்றோம்” என்றும் அறிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments