Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஆயுதம் கிடைச்சா ரஷ்யாவை புரட்டி எடுத்துடுவோம்! – அதிபர் ஜெலன்ஸ்கி!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (15:46 IST)
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் புதிய ஆயுதங்கள் தேவை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணைவதை எதிர்த்து ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரியில் போரை தொடங்கியது. தொடர்ந்து ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யா – உக்ரைன் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

பொதுமக்கள் பலர் பலியாகியுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலமாகியுள்ளனர். ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு தேவையான பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

இதற்கிடையே பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா அடிக்கடி சொல்லி வந்தாலும் செயல்பாடுகளில் பேச்சுவார்த்தைக்கான முன்னேற்றங்கள் காணப்படவில்லை.

ALSO READ: அரியலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து- ஒருவர் பலி.. 30 பேர் படுகாயம்!

இந்நிலையில் போர் குறித்து பேசியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி “கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. போரை நீட்டித்து சென்று ரஷ்யா வெல்ல விரும்புகிறது. எங்களுக்கு புதிய ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அவை கிடைத்தால் ரஷ்ய படைகளின் தாக்குதலை முறியடிக்க முடியும்” என கூறியுள்ளார்.

முன்னதாக போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும் என்ற பீதி உலக நாடுகளிடையே இருந்து வந்தது. இந்நிலையில் ஜெலென்ஸ்கி புதிய ஆயுதங்கள் என பூடகமாக எதை கேட்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

அடுத்த கட்டுரையில்
Show comments