''மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்''- அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (23:10 IST)
அமெரிக்க நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஜோ பைடன் போட்டியிட்டார்.

இதில், ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்கிறார்.

இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் அடுத்தாண்டு (2024) அதிபர் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்  மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதேபோல், தற்போதைய அதிபர் ஜோ பைடனும் இத்தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், அடுத்த அதிபர் தேர்தலில் நான் போட்டியிட விரும்புகிறேன். ஆனால், உறுதியான முடிவை எடுக்கவில்லை. எனக்கு உடன் நல பிரச்சனைகள் இருந்தாலும், மக்களுக்குப் பணியாற்றி நேர்மையுடன் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments