Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணமான அன்று இரவே மனைவியை விவாகரத்து செய்த வாலிபர்

திருமணமான அன்று இரவே மனைவியை விவாகரத்து செய்த வாலிபர்
, செவ்வாய், 8 ஜூலை 2014 (20:32 IST)
சவுதி அரேபியாவில் வாலிபர் ஒருவர் திருமணமான அன்று இரவே தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
 
சவுதி அரேபியாவில் இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடந்தள்ளது. அன்று இரவு அவர்களுக்கு முதல் இரவுக்காக ஹோட்டல் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஹோட்டலுக்கு அவரது மனைவியின் முன்னாள் காதலன் வந்துள்ளார். நேராக தனது காதலியிடம் சென்ற அவர், இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை காண்பித்து மிரட்டியுள்ளார்.
 
அப்போது அந்த பெண் தனக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டதாகவும், புது வாழ்வை ஆரம்பிக்க உள்ளதால் தன்னை விட்டு விடும்படியும் கெஞ்சியுள்ளார். ஆனால் முன்னாள் காதலன் அதனை கேட்காமல், மணமகனிடம் சென்று தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைபடத்தைக் காட்டியுள்ளார். அதில் தனது  மனைவி, சேர்ந்து இருக்கும் படத்தை பார்த்து ஆத்திரம் அடைந்த கணவன், மனைவையை உடனடியாக விவாகரத்து செய்தார். இந்த தகவலை மதபோதகர் ஷேக் காஜி பின் அப்துல் அஜீஸ் அல் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil