Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்வு - நமல் ராஜபக்சே மீது புகார்

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (15:36 IST)
நமல் ராஜபக்சே, தனது தந்தை மகிந்த ராஜபக்சே இலங்கை அதிபராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக நூற்றுக்கணக்கான புகார்கள் எழுந்துள்ளன.
 

 
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே. அவர் அதிபராக இருந்தபோது ஏராளமான ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது உறவினர்கள் மீதும் பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன.
 
ராஜபக்சேவின் மகன்கள், சகோதரர்கள், அவர்களது மனைவி மற்றும் மகன்கள் ஆகியோர் மீதும் நிதிமோசடி உள்ளிட்ட புகார்கள் கூறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருகிறது.
 
இந்நிலையில் ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் மீது அதிரடியாக ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டுள்ளது. இளம்பெண்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பல பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளது.
 
நமல் ராஜபக்சே மீது ஏற்கனவே 3 பெண்கள் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளனர். கண்டியில் உள்ள பிரபல ஓட்டல்களுக்கு இளம் பெண் களை அழைத்து சென்று அவர்களுடன் நாமல் ‘செக்ஸ்’ உல்லாசம் அனுபவித்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகிறது.
 
அதை தொடர்ந்து அந்த ஓட்டல்களுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாதம் ஒன்றுக்கு 4 நாட்கள் ஓட்டல்களுக்கு சென்று பல பெண்களுடன் நமல் உல்லாசம் அனுபவித்தது தெரியவந்துள்ளது.
 
நமல் ராஜபக்சேவுக்கு எதிராக இதுவரை 109 பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நமல் ராஜபக்சே இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

அடுத்த கட்டுரையில்