Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானின் முதல் மறுபயன்பாடு ராக்கெட் சோதனை வெற்றி! சாதித்த ஹோண்டா! - விண்வெளி ஆய்வில் புதிய ஆரம்பம்!

Prasanth K
வியாழன், 19 ஜூன் 2025 (10:10 IST)

விண்வெளி ஆய்வுகளில் உலகம் முழுவதும் பல புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஜப்பான் தனது முதல் மறுபயன்பாடு ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

 

விண்வெளி ஆய்வு, செயற்கைக்கோள் நிலைநிறுத்தல், வீரர்களை விண்வெளிக்கு கூட்டி செல்லுதல் என பல முக்கியமான விஷயங்களுக்கு அவசியமாக இருப்பவை ராக்கெட்டுகள். இந்த ராக்கெட்டுகள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நவீனமாக கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

 

முன்பு ராக்கெட் ஏவப்பட்ட பின் விண்கலம் பிரிந்ததும் ராக்கெட்டின் காலி கண்டெய்னர்கள் கடலில் சென்று விழும். அவற்றை எடுத்து வந்து சுத்தம் செய்து மீண்டும் சில முறை பயன்படுத்த முடியும். ஆனால் இது பெரும் பொருட்செலவு மிக்கது. அந்த சமயத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் கண்டெய்னர்கள் கடலில் விழாமல் மீண்டும் ஏவுதளத்திலேயே வந்து லேண்ட் ஆகும்படி செய்த புதிய கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வில் பொருட்செலவை பெரிதும் குறைத்தது.

 

தற்போது அதன் அடுத்தக்கட்டமாக ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் ராக்கெட்டை முழுவதுமாக டேக் ஆப் மற்றும் லேண்ட் செய்தல் பயன்பாட்டி அடிப்படையில் தயாரித்துள்ளது. 

 

தற்போது இந்த ராக்கெட்டின் ப்ரோட்டோ டைப் சோதனை செய்யப்பட்டதில் 20 அடி உயரம் கொண்ட அந்த ராக்கெட் 889 அடி உயரத்திற்கு மேல் எழும்பி மீண்டும் பத்திரமாக பூமியில் வந்து லேண்ட் ஆகியுள்ளது. இதன் மேம்பட்ட வடிவம் 2029ம் ஆண்டில் தயாராகி விண்ணை நோக்கி புறப்படும் என கூறப்பட்டுள்ளது. கார் தயாரிப்பு நிறுவனமான ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் விண்வெளி தயாரிப்புகளில் இதன் மூலம் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments