Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் நடிகர் உமர் ஷெரீப் மாரடைப்பால் மரணம்

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2015 (02:13 IST)
உலமே போற்றிய ஹாலிவுட் நடிகர் உமர் ஷெரீப் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.


 

எகிப்து நாட்டில் பிறந்த ஓமர் ஷெரீப், லாரென்ஸ் ஆப் அரேபியா மற்றும் டாக்டர் ஷிவாகோ போன்ற படங்களில் நடித்து சர்வதேச புகழின் உச்சிக்கு சென்றவர் ஆவார். 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
 
ஓமர் ஷெரீப் கடைசியாக நடித்த படம் 2013ஆம் ஆண்டு வெளியான ராக் கசாபா எனும் மொராக்கோ பிரெஞ்ச் திரைப்படம் ஈகும். தற்போது அவருக்கு வயது 83 ஆகின்றது. இவரது மனைவி பதேன் ஹமானாவும் நடிகை ஆவார். இருவரும் இணைந்து சில படங்களில் நடித்து உள்ளனர்.
 
லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தில் உமர் ஷெரீப் சிறப்பாக நடித்ததற்காக இவரது பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், இவர் நடித்த டாக்டர் ஷாவிகோ திரைப்படமும் ஆஸ்கர் விருது பெற்றது.
 
உடல் நலக் குறைவால் மரணம் அடைந்த உமர் ஷெரீப்புக்கு ஒரு மகனும், 2 பேரன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பதேன் ஹமானா ஏற்கனவே இறந்து விட்டார்.
 

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

Show comments