Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

Mahendran
செவ்வாய், 26 நவம்பர் 2024 (18:15 IST)
வங்கதேசத்தில் இந்துமத  தலைவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
வங்கதேசத்தின் இந்து மத தலைவர் சின்மோய் கிருஷ்ணதாஸ் என்பவரை டாக்கா விமான நிலையத்தில் அதிரடியாக அந்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
 
இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு இந்துக்கள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
 
இஸ்கான் அமைப்பு தலைவர் கைது விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து மத துறவி கைது மற்றும் ஜாமீன் மறுப்பு கவலை அளிப்பதாகவும் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய பல தாக்குதலை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வங்கதேசத்தில் இந்து மத தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென 25,000க்கும் மேற்பட்டோரை வீட்டுக்கு அனுப்பிய Intel .. AI அசுர வளர்ச்சியால் சோகம்..!

யூடியூப் பார்த்து டயட்டில் இருந்த பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை..!

டேட்டிங் ஆப் மூலம் நட்பு.. ஆணுறையுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற டாக்டர்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

அடுத்த கட்டுரையில்
Show comments