Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை இறக்கும் தறுவாயில் நெஞ்சை உருக்கும் பாடல் பாடி விடையனுப்பிய தந்தை

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2014 (15:49 IST)
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை இறக்கும் தருவாயில் குழந்தையின் தந்தை உருக்காக பாடி விடையனுப்பினார்.
 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த கிரிஸ் பிக்கோ, ஆஷ்லே தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை குறைமாதத்தில் பிறந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தது.
 
துரதிர்ஷ்டவசமாக குழந்தை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது. குழந்தையின் தாயாரான ஆஷ்லேயும் பிரசவத்தின்போதே இறந்துவிட்டார். இதனால் குழந்தை இறப்பதற்கு முன்பு மருத்துவமனையிலேயே அதன் அருகில் அமர்ந்து கிட்டார் வாசித்துக் கொண்டே பாடல் பாடியுள்ளார்.
 
கிரிஸ் தனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் செய்தி அனுப்பியுள்ளார். அதில், "என்னுடைய சிறிய போராளி லெனான் ஜேம்ஸ் பிக்கோ நேற்றிரவு அவனுடைய தந்தையின் கரங்களிலிருந்து பிரிந்து உறங்கச் சென்றுவிட்டான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

 
மேலும், "நான் அவனுடன் மறக்கமுடியாத நான்கு நாட்களை கழித்ததற்காக நன்றியுடையவனாக இருப்பேன். அவனுடைய அம்மா அவனைக் கண்டிருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பாள். அவனை தொட்டிருப்பாள், அவனோடு பேசியிருப்பாள், பாடியிருப்பாள், அவனை குளிக்க வைத்திருப்பாள். ஆனால் எனக்கும் பாக்கியதை இல்லாமல் போய்விட்டது.
 
என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. எனக்கு வேண்டியதெல்லாம் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட உங்களது அன்பும், ஆதரவும் தான். உங்கள் எல்லோருக்கும் அன்பு தேவை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
வீடியோவில் குழந்தையின் உடல் வெள்ளைத்துணியால் மூடப்பட்டுள்ளது. இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ காட்சியை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Show comments