Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை வேண்டாம். முடிந்தால் போலிசாரைக் கொல்லுங்கள் : ஹர்திக் பட்டேல்

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (15:59 IST)
போராட்டத்தில் ஈடுபடும் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். உங்களுக்கு தைரியம் இருந்தால் போலிசாரைக் கொல்லுங்கள் என்று ஹரிதிக் பட்டேல் கூறியதாக வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி,பல போராட்டங்களை முன்னின்று நடத்தி வருபவர்  ஹரிதிக் பட்டேல். 
 
சமீபத்தில், இவரின் போராட்டத்துக்கு ஆதரவாக பேசிய விபுல்தேசாய் என்ற இளைஞர், இந்தப் போராட்டத்திற்காக தான் உயிர் தியாகம் செய்ய தயார் என்று கூறியிருந்தர். இதனைக் கேள்விப்பட்ட ஹரிதிக் பட்டேல் அவரது வீட்டிற்குச் சென்றார். பின்னர் அவரிடம் பேசிவிட்டு இருவரும் வெளியே வந்தபோது விபுல்தேசாய் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.
 
அதில் “ஹர்திக் பட்டேல் என்னிடம், நாம் பட்டேல் சமூகத்தின் மைந்தர்கள். நாம் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. உங்களுக்கு தைரியம் இருந்தால், இரண்டு அல்லது மூன்று போலிசாரைக் கொல்லுங்கள் என்று கூறினார் ”என்று கூறியதாக தெரிகிறது. இது குஜராத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹர்திக் பட்டேல்  “போலிஸாரை கொல்லுங்கள் என்று நான் யாருக்கும் அறிவுரை கூறவில்லை. இது இந்தப் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி. நான் அப்படி கூறியதற்கான ஆதாரத்தை காட்டுங்கள். அதன் பிறகு என் மீது நடவடிக்கை எடுங்கள்” என்று கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments