Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானில் பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கிப் பயிற்சி

பாகிஸ்தானில் பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கிப் பயிற்சி
, புதன், 28 ஜனவரி 2015 (18:15 IST)
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு துப்பாக்கிப் பயிற்சி அளிப்பட்டு வருகிறது.
 

 
இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த வடமேற்கு மாகாண கல்வி அமைச்சர், “ ஒவ்வொரு ஆசிரியரும்  துப்பாக்கிகள் கொண்டு செல்வது கட்டாயம் கிடையாது. ஆனால் யார் பள்ளிகளுக்கு துப்பாக்கி கொண்டு செல்ல நினைக்கிறார்களோ அவர்களுக்கு அனுமதியுடன் வழங்குவோம்.
 
webdunia

 
மாகணத்தில் உள்ள 35 ஆயிரம் பள்ளிகள் மற்றும் கல்லுரிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு போலீசார் இல்லை. எனவே நாங்கள் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி அளிக்கிறோம்” என்றார்.
 
மேலும் இது குறித்து காவல்துறை அதிகாரி  முகமது லதீஃப் கூறுகையில், “இது இரண்டு நாள் பயிற்சி வகுப்புதான். இதில் அவர்களுக்கு துப்பாக்கியை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து கற்றுத்தரப்படுகிறது.
 
webdunia

 
துப்பாக்கியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து கடந்த வாரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள சில ஆசிரியர்கள் கூட்டமைப்பு ’ஒரு கையில் பேனாவையும் மற்றொரு கையில் துப்பாக்கியையும் எப்படி வைத்திருக்க முடியும்’ என்று கேள்வி எழுப்பியுள்ளன.
 
கடந்த மாதம் பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் உள்ள ராணுவ பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 132 பள்ளி குழந்தைகள் உட்பட 150  பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil