Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிரிக்க நாடான கினியாவில் ஆட்சிக்கவிழ்ப்பு! – நாட்டை கைப்பற்றியது ராணுவம்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (08:29 IST)
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் அதிபர் ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த 2010ம் ஆண்டு முதல் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று ஆல்பா காண்டே அதிபராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவரது ஆட்சி மீது பல்வேறு புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் அதிபர் மாளிகையை தாக்கிய ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. ராணுவ கர்னல் மமாடி டம்போயா இதுகுறித்து தொலைக்காட்சியில் அறிவித்தபோது, அரசாங்கத்தை இனியும் தனிநபர் ஒருவரிடம் ஒப்படைக்க முடியாது என்றும், இனி மக்களே கினியாவை ஆள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் கினியா ராணுவத்தின் இந்த செயலுக்கு ஐ.நா உலக சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.. உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்..! தமிழக அரசுக்கு நீதிபதி சந்துரு பரிந்துரை.!!

சென்னை பெசன்ட் நகர் கார் விபத்து: ஆந்திர எம்.பி., மகள் கைது

பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்..! பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments