Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் வாங்க சென்ற பாட்டிக்கு சிக்கியது அதிர்ஷ்டம்! லாட்டரியில் ரூ.1.9 கோடி பம்பர் பரிசு!

Prasanth Karthick
புதன், 1 மே 2024 (11:34 IST)
அமெரிக்காவில் சிக்கன் வாங்க கடைக்கு சென்ற மூதாட்டிக்கு லாட்டரியில் 1.9 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.



சமீபத்தில் நடந்த குருப்பெயர்ச்சியில் குருவின் பார்வை அமெரிக்காவை சேர்ந்த மூதாட்டி மேல் பட்டுள்ளது போலும். அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள அனாபொலிஸ் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சமீபத்தில் அங்குள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு சாப்பிட சிக்கன் உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த அவர் அருகில் இருந்த கடை ஒன்றில் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். சமீபத்தில் அந்த லாட்டரிக்கான பரிசு விவரங்கள் வெளியான நிலையில் மூதாட்டியும் தனது லாட்டரி எண் அதில் உள்ளதா என்று சோதித்துள்ளார். அதில் அந்த லாட்டரி எண் உள்ளதுபோல பாட்டிக்கு தோன்றியுள்ளது.

உடனடியாக தனது மகளிடமும் அந்த லாட்டரி சீட்டை காட்டியுள்ளார். அது பாட்டியின் லாட்டரி எண்தான் என்பது தெரிந்தவுடன் குடும்பமே குஷியில் ஆழ்ந்துள்ளது. லாட்டரி பரிசு வென்ற அந்த பாட்டிக்கு 2,29,682 டாலர்கள் (இந்திய மதிப்பில் 1.9 கோடி) பரிசாக கிடைக்க உள்ளது. சில காரணங்களால் பாட்டி பெயர் வெளியிடப்படவில்லை. பரிசை வென்ற பாட்டி இனிதான் தனது வாழ்க்கை தொடங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்.. கறார் வேண்டாம்.. சொத்து வரி குறித்து தமிழக அரசு அறிவுறுத்தல்?

திருமண தகராறுகள் வழக்குகளில் உடனடி கைது நடவடிக்கை எடுக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்

16 வயது மாணவனுக்கு பலமுறை பாலியல் பலாத்காரம்.. கைதான ஆசிரியைக்கு எளிதாக கிடைத்த ஜாமின்..!

ஆம்புலன்ஸ் இல்லாததால் வீட்டில் இரட்டை குழந்தைகள் பிரசவம்; ஒரு குழந்தை உயிரிழப்பு!

ஆதார், வாக்காளர் அட்டைகள் நம்பகமானது அல்ல.. பாஸ்போர்ட் அல்லது பிறப்பு சான்றிதழ் வேண்டும்: தேர்தல் ஆணையம்

அடுத்த கட்டுரையில்
Show comments