Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச நடிகை மூலம் காதலனை சோதித்த காதலி : வைரல் வீடியோ

ஆபாச நடிகை மூலம் காதலனை சோதித்த காதலி : வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (13:42 IST)
ஒரு ஆபாச நடிகையை வைத்து காதலனின் ஒழுக்கத்தை பற்றி சோதனை செய்த காதலியின் வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
தனது காதலனை சோதிக்க நினைத்த ஒரு பெண், பிரபல ஆபாச நடிகையான வலிரியா என்பவரின் உதவியை நாடினார். அதற்கு ஒத்துக் கொண்ட அவர், அந்த பெண்ணின் காதலரை பின் தொடர்ந்து அவர் ஒரு கடைக்குள் செல்லும் போது பேச்சு கொடுக்கிறார். 
 
ஆனால், வலிரியாவை அந்த இளைஞர் தவர்த்து விட்டு உள்ளே செல்கிறார். அதன்பின் அவர் வெளியே வரும் வரை காத்திருக்கும் வலிரியா, மீண்டும் அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார்.
 
தன்னுடைய செல்போன் பிரச்சனை, உங்களிடம் போன் இருக்கிறதா என்று ஆரம்பித்து, நீங்கள் தனியாக தங்கியிருக்கிறீர்களா?.. நான் ஒரு ஆபாச நடிகை.. இன்று இரவு நாம் ஒன்றாக தங்கலாமா? என்று அவரை விரட்டுகிறார். ஆனால் எதற்கும் மசியாத அந்த இளைஞர் அங்கிருந்து நழுவுகிறார். 
 
இதையெல்லாம், அந்த வாலிபரின் காதலி, வீடியோவில் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். எங்கே தன் காதலன் அந்த பெண்ணுடன் சென்று விடுவாரோ என்ற பதட்டத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இறுதியில் தனது காதலன் ஒரு ஜென்டில்மேன் என்று மகிழ்ச்சியில் அவர் ஆர்ப்பரிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் வந்து சேர்வார்கள்!– இன்றைய ராசி பலன்கள்(28.09.2024)!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்