Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி எடுத்து கொண்டால் மாஸ்க் அணிய தேவையில்லை: அமெரிக்க அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (07:50 IST)
முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது 
 
அமெரிக்காவில் தற்போது 42 சதவீத பொதுமக்கள் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் அவர்களில் 30 சதவீதம் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முழு அளவில் எடுத்துக் கொண்ட 30 சதவீதத்தினர் மாஸ்க் அணிய தேவையில்லை என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது 
 
அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் முழு அளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மாஸ்க் அணியாமல் எங்கு வேண்டுமானாலும் வெளியே செல்லலாம் என்றும் அவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும் என்பதால் இந்த சலுகை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பொதுமக்கள் மாஸ்க் இன்றி  வெளியே சுற்றித் திரிந்து வருகின்றனர். இன்னும் ஒரு சில வாரங்களில் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments