Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்முலா 1 கார் பந்தயம்: வெர்ஸ்டப்பென் புதிய சாதனை

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (13:02 IST)
.

பார்முலா 1 கார் பந்தயத்தில் வெர்ஸ்டப்பென் 364 புள்ளிகளுடன் சாம்பியன் ஷிப் வாய்ப்பில் முதலிடத்தில் இருக்கிறார்.
 

பார்முலா 1 கார்  பந்தயம் 22 சுற்றுகளாக நடத்தப்படும் நிலையில், இதன் 14 சுற்று இத்தாலியின் கிராண்ட்பிரி, அங்குள்ள  மோன்சா  ஓடுதளத்தில் நடைபெற்றது.

336.72 கிமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் காரை ஓட்டினர். இதில், நடப்பு சேம்பியனான நெதர்லாந்தைச் சேர்ந்த மேக்ஸ் வெர்ஸ்டப்பென் ( ரெட்புல் அணி) 1 மணி 13 நிமிடம் 41.143 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.

இதற்கு அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.  7  மெக்சிகோவில் செர்ஜிகோ 2 வதாக வந்தார். அவருக்கு 18 புள்ளிகள் வழங்கப்பட்டது.

வெர்ஸ்டப்பென் இந்த சீசனில் மட்டும் இந்த வெற்றியோடு சேர்ந்து 12 வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஒரு சீசனில் அதிக வெற்றி பெற்ற வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.  இதற்கு முன்னதாக ஜெர்மனியைச் சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல் தொடர்ந்து 9 போட்டிககளில் வென்றது சாதனையாக இருந்த நிலையில், இதை முறியடித்துள்ளார் வெர்ஸ்டெப்பென்.

15 வது சுற்று வரும் 17 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. 14 சுற்று முடிவில் வெர்ஸ்டப்பென் முதலிடத்தில் உள்ளதால் அவர் சாம்பியன் பட்ட  வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments