Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (08:03 IST)
ஆபாச நடிகைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்க முன்னாள் அதிபர் மற்றும் தொழிலதிபர்  டொனால்ட் டிரம்ப் ஆபாச நடிகையை  சந்தித்து பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு ஏற்பட்டது. தன்னுடன் உடலுறவு கொள்ள விரும்புவதாக ட்ரம்ப் கூறியதாகவும் இதனை அடுத்து அவர் தனக்கு பணம் கொடுத்ததாகவும் அந்த நடிகை பேட்டி அளித்திருந்தார். 
 
இந்த நிலையில் டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் சிறிது நேரத்தில் விடுதலை செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது. 
 
2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஆபாச நடிகை ஸ்டார்மி என்பவருக்கு 1.3 லட்சம் டாலர் தந்ததாக எழுந்த புகார் மீதான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள்.! அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

அடுத்த கட்டுரையில்