Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்

முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்

முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்
, செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (23:00 IST)
நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம் அடைந்தார்.
 

 
நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா (79) நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்த நிலையில், சுஷில் கொய்ராலா இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருடைய சடலம் கட்சியின் தலைமையகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. 
 
ந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா, நேபாள அரசியலில் 1954 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். நேபாளத்தில், 1960 ஆம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பின்பு, இந்தியாவில் இருந்தவாறே 16 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டார். 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil