Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளக்காடான சஹாரா பாலைவனம்..! உச்சமடையும் பருவநிலை மாற்றம்?

Prasanth Karthick
ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (10:04 IST)

சமீபமாக உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் பிரபலமான சஹாரா பாலைவனம் வெள்ளக்காடாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

புவி வெப்பமயமாதல், அதிகரிக்கும் மாசுபாடு காரணமாக உலகத்தின் பருவநிலைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக பல ஆண்டுகளாகவே சுற்றுசூழல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல நாடுகள் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை பெரிய அளவில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

 

ஆண்டுதோறும் பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கடும் கோடை வெப்பத்தினால் பலர் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வரும் அதே சமயம் கடும் வறட்சி மிகுந்த பாலைவனங்களிலும் மழை பெய்து வருகிறது.
 

ALSO READ: தவெக மாநாட்டில் டாம் குரூஸ்-க்கு பாதுகாப்பு அளித்த துபாய் நிறுவனம்.. ஆச்சரிய தகவல்..!
 

கடந்த சில நாட்களாக மொராக்கோ நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடந்த 50 ஆண்டுகளாக வறண்டு கிடந்த இரிக்கி ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. மிக நீண்ட பாலைவனமாக உள்ள சஹாரா பாலைவனத்தின் ஒரு பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது.

 

இவை பருவநிலை மாற்றத்தின் விளைவு என குறிப்பிடும் இயற்கை ஆர்வலர்கள், பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து உலக நாடுகள் விவாதிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் பேசி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக மாநாட்டில் டாம் குரூஸ்-க்கு பாதுகாப்பு அளித்த துபாய் நிறுவனம்.. ஆச்சரிய தகவல்..!

இரவே மாநாட்டு திடலுக்கு வந்துவிட்ட விஜய்.. மிட்நைட் மீட்டிங்கில் முக்கிய முடிவு..!

தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது போக போகத்தான் தெரியும். -தவெக மாநாடு குறித்து சீமான் பதில்!

TVK Maanadu: போட்டோ, வீடியோ தொடங்கி சரக்கு வரை..! த.வெ.க மாநாட்டில் 18 வகையான தடைகள்! - என்னென்ன தெரியுமா?

சசிகுமாரின் 'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments